பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை

தகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தொடர்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 | 

பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை

தகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தொடர்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தன்னை வேட்பாளர் போல் முன்னிறுத்தி மனைவியுடன் தகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்வதாக புகார் தெரிவித்த அமமுக வேட்பாளார் புகழேந்தி, பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், புகழேந்தி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகள் படி பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP