பாட்டில்களில் ஆவின் பால் : நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆவின் பாலை பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் தர ஆலோசிக்க வேண்டும் என, பிளாஸ்டிக் தடையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 | 

மருந்து, பால் அடைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் மாசடைவது தடுக்கப்படும் என்றும், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணி, சணல், பாக்குமட்டை போன்ற மாற்று பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘கடும் அபராதம் விதிக்காவிட்டால் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை முழுமையாக இருக்காது. பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்க்கையில் மெல்ல ஊடுருவி சுற்றுச்சூழலுக்கு சாவுமணி அடித்துள்ளது. பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்துவது இமாலய இலக்காக உள்ளது. சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்கள், அரசு மெல்ல சிந்தித்து உலகை காக்க முன்வந்துள்ளனர். பிளாஸ்டிக் மீதான தடை காகிதத்தில் மட்டும் இல்லாமல் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP