இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத்தடை!

சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில், அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.
 | 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத்தடை!

சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்  முன்ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில், அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது. 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் திட்டத்தினை கடுமையாக விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு காட்சியில் தோன்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அரசு வழங்கிய மிக்ஸியை தூக்கி நெருப்பில் எறிவதாக அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனிடையே நேற்று இரவு முருகதாஸ் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், "எனது வீட்டின் கதவை போலீசார் தட்டி உள்ளனர். நான் வீட்டில் இல்லை என்றதும் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. வழக்கில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டை நள்ளிரவில் தட்டியதை அடுத்து, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு நவம்பர் 27ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரை, "படம் தணிக்கை சான்று பெற்று தான் ரிலீசாகியுள்ளது. எனவே தணிக்கை செய்யப்பட்ட பின்பு ஆளும்கட்சி இதனை எதிர்ப்பது சரியல்ல. சர்கார் படத்தில் டிவியை எரித்தால் ஆட்சேபணை இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP