புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுச்சேரியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 3 பேரை நியமித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
 | 

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுச்சேரியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 3 பேரை நியமித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.  

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இம்மூவரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநில ஆளும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் இவர்கள் மூவரும் பேரவைக்கு வரக்கூடாது என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இது தொடர்பான வழக்கில் பா.ஜ.கவைச் சேர்ந்த 3  எம்.எல்.ஏக்கள்  நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம்(மார்ச்.22) தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு அளித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP