எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார் - திமுக தரப்பு வாதம்

எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார் என நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம் செய்து வருகிறது
 | 

எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார் - திமுக தரப்பு வாதம்

எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார் என நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம் செய்து வருகிறது. 

உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
முன்னதாக 'மெரினாவில் முன்னாள் முதல்வருக்கு இடம் ஒத்துக்கூடாது' என வழக்கு தொடர்ந்தவர்கள் தங்களது வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு, "இந்த வழக்கில் தீர்ப்பை இப்போதே வழங்க வேண்டுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என தெரிவித்தது. 

திமுக தரப்பு வாதம் செய்கையில், "எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும். அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை" என வாதம் செய்து வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP