நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை 

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை 

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையில் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை 6ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் மூவர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில்,  இந்த வழக்கில், சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவிக்கு  3 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP