8 வழி சாலை திட்டம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

8 வழி சாலை திட்டம் குறித்த விரிவான அறிக்கையை செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

8 வழி சாலை திட்டம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

8 வழி சாலை திட்டம் குறித்த விரிவான அறிக்கையை செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் -சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து 8 வழி சாலை திட்ட செயல் இயக்குநர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 8 வழி சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், முறையாக அறிவிப்பு விடுத்து இழப்பீடு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  நிலம் கையகப்படுத்தவே முதற்கட்ட அனுமதி கேட்பதாகவும், சுற்றுச்சூழல் அனுதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் எனவும் மத்திய அரசு உறுதிப்பட தெரிவித்தது. 

மத்திய அரசு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், 8 வழி சாலை அவசியமான திட்டம் என கூறுகிறீர்கள் ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெற கால தாமதம் ஆகும் என்கிறீர்கள். இந்த 8 வழி சாலை திட்டமே குழப்பமாக உள்ளதாக கூறினர்.  8 வழி சாலை திட்டம் எதற்காக செயல்படுத்தப்படுகிறது  என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், 8 வழி சாலை திட்டம் குறித்த விரிவான அறிக்கையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP