8 வழிச்சாலையை தடுக்க ஹைகோர்ட்டில் வழக்கு: அன்புமணியின் முதல் அடி

சென்னையில் இருந்து சேலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய 8 வழிச்சாலைக்கு எதிராக, பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
 | 

தமிழகத்தில் நெடுவாசல், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு பிரச்னைகளுக்கு அடுத்ததாக மிகப்பெரிய போராட்டம் ஏற்பட காரணமாக அமைந்து சென்னையில் இருந்து சேலத்துக்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ள 8 வழிச்சாலை தான். இந்த திட்டத்தால், இரு நகரங்களுக்கும் இடையே உள்ள மலைகள், விலை நிலங்கள், நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளதாக போராட்டங்கள் தலைதூக்கின. 

தமிழக அரசின் சார்பில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பா.ம.க இளைஞரணித் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சேலம் - சென்னை பசுமை வழி சாலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP