45 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

கன்னியாகுமரி தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது பற்றி பதிலளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் முதலாம் கட்ட வாக்குப்பதிவின் போது, கன்னியாகுமரி தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் விடுபட்டதால் அவர்கள் வாக்களிக்க முடியவில்லை. 

இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மீனவர் அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையினர் அதிகம் பேர் நீக்கப்பட்டதாகவும், 47 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 45 ஆயிரம்  வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "கன்னியாகுமரி தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் எதற்காக நீக்கப்பட்டது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP