ராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா? உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..!

ராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா? உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..!
 | 

ராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா? உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..!

கொரோனா வைரஸ் பீதியால் ராமேஸ்வரத்திற்கு வந்த  சீன பயணியை சுகாதாரத் துறையினர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், சீனாவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி சீனாவின் அன்கியுன்ங் மாகாணத்தில் வு சென் சூ (42) என்பவர் ஆசிரியராக பணி புரிகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் பார்வையிட்டு இறுதியாக ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மண்டபம் சுகாதாரத்துறையினர், போலீஸார் உதவியுடன் அவரை சோதனை செய்தனர்.

ராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா? உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..!அப்போது இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் உதவியுடன் மண்டபம் வட்டார சுகாதார அலுவலர் மகேந்திரன், மேற்பார்வையாளர் தியாகராஜன் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் உள்ள மருந்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். மதுரை விமான நிலையம் வந்த வு சென் சூ வை சுகாதர குழுவினர் தீவிர பரிசோதனை செய்து, உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா? உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..!மருத்துவ குழுவினர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும், இந்திய அரசு அறிவுருத்தலின் படி அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். சீன பயணியின் வருகையால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP