விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை! உருக்கமான காதல் கடிதம் சிக்கியது!

விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை! உருக்கமான காதல் கடிதம் சிக்கியது!
 | 

விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை! உருக்கமான காதல் கடிதம் சிக்கியது!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது மகள் நிவேதா(23) சேலத்தில் இருக்கும் பெரியார் பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, அந்த கல்லூரியில் 2ம் ஆண்டு  தாவரவியல் பாடப் பிரிவில் படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரி வகுப்புக்குச் சென்று வந்த நிவேதா, கடந்த 11ம் தேதி விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நிவேதா தற்கொலை செய்துக் கொண்டதற்கு அடுத்த நாள் தான் விடுதியின் காப்பாளருக்கு, சக மாணவிகள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை! உருக்கமான காதல் கடிதம் சிக்கியது!

அதே விடுதியில் நிவேதாவுடன் தங்கி இருந்த மாணவிகள் ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக களஆய்வுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நிவேதா மட்டும் விடுதியில் இருந்துள்ளார். இந்நிலையில், போலீசார் நிவேதா தங்கியிருந்த அறையை ஆய்வு செய்த போது, உருக்கமான 3 பக்க காதல் கடிதம் சிக்கியது. மேலும், ஒரு டைரியும், செல்போனும் கிடைத்துள்ளது. 

மாணவி நிவேதா, ஒருதலையாக ஒரு வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என்றும், நிவேதாவின் காதலை அந்த வாலிபர் ஏற்க மறுத்து, காதலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிவேதா விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசாரின் விசாரணை முடிந்தால் தான் தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியும்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP