பிரபல சென்னை கல்லூரியில் போதை மாத்திரை விற்பனை படு ஜோர்! அதிர்ச்சியில் போலீசார்!

வாட்ஸ்அப் மூலம் கஞ்சா, வெளிட்டு போதை மாத்திரை விற்கும் மாணவர்கள்..
 | 

பிரபல சென்னை கல்லூரியில் போதை மாத்திரை விற்பனை படு ஜோர்! அதிர்ச்சியில் போலீசார்!

சென்னை வடபழனியில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வெளிநாட்டு பவுடர், மாத்திரைகள், கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து வெளிநபர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வடபழனி போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக், எஸ்எம்எஸ் உள்பட பலவற்றையும் ரகசியமாக கண்காணித்தனர். 

மேலும்  காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி வளாகம் அருகே சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்தின் வெளியே மாணவர்கள் சிலர் செல்போனை வைத்து ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனர். வெளி நபர்கள் அந்த வழியாக செல்லும் போது செல்போனை மறைத்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த 3  மாணவர்களை மடக்கி அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தனர்.
பிரபல சென்னை கல்லூரியில் போதை மாத்திரை விற்பனை படு ஜோர்! அதிர்ச்சியில் போலீசார்!அப்போது வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி போதை பவுடர், கஞ்சா, மாத்திரை போன்றவற்றை விற்றது தெரிய வந்தது. கல்லூரிக்கு செல்லும் முன்பும் அதன் பின்பும் மாணவர்கள் போதை  பொருட்களை பயன்படுத்தியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பிரபல சென்னை கல்லூரியில் போதை மாத்திரை விற்பனை படு ஜோர்! அதிர்ச்சியில் போலீசார்!

இதையடுத்து அதே கல்லூரியில் படித்து வரும் விஷால்குமார், விஜய், ஹரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டில் இருந்து போதை பொருள் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள் அல்லது இவர்களுக்கு சப்ளை செய்யும் குழு எங்குள்ளது. இவர்களுடன் சேர்த்து எத்தனை பேர் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதைதொடர்ந்து 3 கல்லூரி மாணவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் வெளிநாட்டு போதை பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP