காணும் பொங்கலுக்கு ரெடியானது சென்னை பீச்..!

காணும் பொங்கலுக்கு ரெடியானது சென்னை பீச்..!
 | 

காணும் பொங்கலுக்கு ரெடியானது சென்னை பீச்..!

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையிலுள்ள பீச்களில் ஏராளமானோர் பொழுதுபோக்குக்காக வருவது வழக்கம். இதைமுன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பீச் முழுவதும் பொதுமக்கள் கடல்நீரில் இறங்காத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மூவாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலோரக் காவல்படையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சிபெற்ற கமாண்டோ வீரர்கள் நூறுபேர் கடலோரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறிக் கடலுக்குள் யாரும் இறங்கிச் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பதற்காக நீச்சல் பயிற்சிபெற்ற மீனவர்கள் 400பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடற்கரை நெடுகிலும் 15 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.குழந்தைகளின் கையில் பெற்றோரின் செல்பேசி எண் எழுதப்பட்ட அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் குழந்தைகள் காணாமல் போவதினைத் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP