சென்னையில் கத்தி முனையில் பெண்களிடம் செயின் பறிப்பு! 7 மாதங்களாக தொடர்ந்த வழிப்பறி!

கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு.. பெண்களை குறிவைத்து வழிப்பறி செய்யும் கும்பல்
 | 

சென்னையில் கத்தி முனையில் பெண்களிடம் செயின் பறிப்பு! 7 மாதங்களாக தொடர்ந்த வழிப்பறி!

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் முனியம்மாள்(45). இவர் முடிச்சூர் சாலை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது முனியம்மாள் கூச்சலிடவே அங்கிருந்த பொது மக்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் அங்கிருந்து அவன் தப்பி ஓடிவிட்டான். இது குறித்து முனியம்மாள் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சென்னையில் கத்தி முனையில் பெண்களிடம் செயின் பறிப்பு! 7 மாதங்களாக தொடர்ந்த வழிப்பறி!

இதில் கொள்ளையன் மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் என்பதும் அவன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 2 ஆட்டோ, 8 சவரன் தங்க நகை, 5 செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த 7 மாத காலமாக தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் மீது வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP