என்னைத் தொடவும் முடியாது... அழிக்கவும் முடியாது... நித்தியானந்தா பரபரப்பு வீடியோ!

என்னைத் தொடவும் முடியாது... அழிக்கவும் முடியாது... நித்தியானந்தா பரபரப்பு வீடியோ!
 | 

என்னைத் தொடவும் முடியாது... அழிக்கவும் முடியாது... நித்தியானந்தா பரபரப்பு வீடியோ!

சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு, நடிகைகளுடனான தொடர்பு என்று ஏகப்பட்ட சர்ச்சைகளில் ஆகியவற்றில் சிக்கியிருப்பவர் நித்தியானந்தா. சமீபத்தில் குஜராத்தில் செயல்பட்டு வந்த அவரின் ஆசிரம் இழுத்து மூடப்பட்டது. விசாரணைக்காக போலீசார் அவரை தேடிய போது அவர் எங்கிருக்கிறார் என்பதையே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வாடர் அருகே ஒரு தீவை, விலைக்கு வாங்கி அதை ‘கைலாஷ் நாடு’ என நித்தியானந்தா பிரகடனம் செய்து ரகளை கட்டினார் நித்தி.

என்னைத் தொடவும் முடியாது... அழிக்கவும் முடியாது... நித்தியானந்தா பரபரப்பு வீடியோ!

தனித்தீவுக்கு மொழி, கொடி, சின்னம் எல்லாம் அறிவித்து அதகளம் செய்து வந்தார். ஆனால், நித்யானந்தாவுக்கு அடைக்கலமோ அல்லது சொந்த நிலம் வாங்க அனுமதியோ கொடுக்கப்வில்லை என ஈகுவடார் அரசு விளக்கம் அளித்ததும், புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்  நித்தியானந்தா.

புது வீடியோவில் ‘உண்மையை தெரிவிப்பதன் மூலம் நான் என்னுடைய வலிமையை வெளிப்படுத்துவேன். என்னை யாரும் தொடவும் முடியாது. அழிக்கவும் முடியாது. நான் உங்களிடம் உண்மையை சொல்லுகிறேன். நான் தான் பரமசிவன். சீடர்களாகிய நீங்கள் என்னிடம் நேர்மை மற்றும் விசுவாசத்தை காண்பித்தீர்கள். உங்களுக்கு மரணமே இல்லை’ என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

நித்தியானந்தாவை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் இப்படி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP