மன்னிப்பு கேட்க முடியாது! - ரஜினிகாந்த் ஆவேசம்

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது,அந்த கருத்து உண்மைதான் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, ஆதித் தமிழர் கட்சியினர் நேற்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

                                              மன்னிப்பு கேட்க முடியாது! - ரஜினிகாந்த் ஆவேசம்                     

இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,  தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பெரியார் குறித்து இல்லாததை ஒன்றை நான் கூறவில்லை. பத்திரிகைகள் மூலமாக நான் கேள்விப்பட்டதைத்தான் பேசினேன். 1971ல்  சேலத்தில் நடந்த அந்த சம்பவம் கற்பனையாக கூறவில்லை மற்றவர்கள் கூறியதும் பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன் என்று கூறி 2017 ஆம் ஆண்டு இந்துவின் அவுட்லுக் பத்திரிக்கையில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது என அதன் ஆதாரத்தையும் செய்தியாளர்களுக்கு காட்டினார். சேலத்தில் நடந்த அந்த சம்பவம் மறுக்ககூடிய சம்பவம் அல்ல , மறக்க வேண்டிய சம்பவம் என்று கூறினார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP