பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..!

எந்த தவறும் செய்யாத பச்சிளம் குழந்தை உயிரோடு புதைப்பு..!
 | 

பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில் வசமாமிடி என்ற மலைக் கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்திற்கு ஒதுக்குபுறமான பகுதியில் குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்டது. இதையடுத்து, குழந்தை அழுகை சத்தத்தை கேட்ட அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார். இதனை கட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டு குழந்தையை மீட்டனர். 
பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..!

அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் குழந்தை ஒப்படைக்கப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. எனினும் உடல் முழுவதும் காயங்கள் இருந்த நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். குழந்தையை புதைக்க முயன்ற நபர் குறித்தும், எதற்காக இவ்வாறு செய்தார் உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடத்துகின்றனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP