தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ம் தேதி தாக்கல்

தமிழக சட்டசபையில் வரும் 14-ந் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார் என சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை அடையாறில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டில் (2020-2021) மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, மக்கள் நலம், உள்ளிட்டவைகள் அடங்கிய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என கூறினார்.

                                                           தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ம் தேதி தாக்கல்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP