தமிழக பட்ஜெட் 2020! வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில், கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் சிறப்பம்சமாக 11 தமிழக மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூர்களை அமைப்பதற்காக 1,200 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 | 

தமிழக பட்ஜெட் 2020! வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் உரையுடன் துணை முதலமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் நுழைந்தார். அவருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வந்தார்.

தமிழக பட்ஜெட் 2020! வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு!

ஓபிஎஸ் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளும் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. சபாநாயகர் தனபால் பட்ஜெட் தாக்கல் செய்ய அழைத்ததை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பற்றி பேசிய பின், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கலில், உணவு மானியத்திற்கு 6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலுவைக் கடன் தொகை 4,56,660.99 கோடி ரூபாயாக உள்ளதாகவும், தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் நிலுவைக்கடன் 21.83% சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பட்ஜெட் 2020! வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு!

சுகாதாரத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,  தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தில், கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் சிறப்பம்சமாக 11 தமிழக மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூர்களை அமைப்பதற்காக 1,200 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP