பிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..

திருவள்ளூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயது மகன் உள்ளார். சித்திரைவேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
 | 

பிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..

திருவள்ளூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயது மகன் உள்ளார். சித்திரைவேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால், தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் சண்டைபோடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

இந்நிலையில்,  தனது வீட்டிற்கு அருகில் உள்ள தங்கையின் வீட்டில் தங்கை பிரியாணி சாப்பிடுவதை பார்த்து விட்டு வந்த சித்திரைவேல், தனது மனைவியிடம் தனது தங்கையிடம் இருந்து பிரியாணி வாங்கி வருமாறு சண்டையிட்டுள்ளார். அதற்கு கற்பகம் மறுத்துள்ளார். இதையடுத்து, சித்திரைவேல் தனது வீட்டில் பிரியாணி செய்து தர கேட்டுள்ளார். வீட்டில் பிரியாணி செய்வதற்கான பொருட்கள் இல்லாததால் கற்பகம் பிரியாணி செய்து தர மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த சித்திரைவேல், கற்பகத்தின் மேல் மண்ணெண்ணெயை ஊற்றி அவரை எரித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கற்பகத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சித்திரைவேலுவை கொலை முயற்சியின் வழக்கின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள கற்பகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP