1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்!!

#BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்!!

நாடு முழுவதுமே மாணவர்கள் அரசியல் தலைவர்களால் பந்தாடப்பட்டு வருகிறார்கள் என்கிற கருத்து பொதுமக்களிடையே நிலவி வருகிறது. ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றத்தின் போது, புதிய கல்வி கொள்கைகளைக் கொண்டு வருவதில் துவங்கி, பாட திட்டத்திலும், கட்சி சார்புகளைத் திணிக்கிறார்கள் என்று பொதுமக்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி செய்ய நினைக்கும் போக்கை எதிர்த்து சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய அமைச்சரின் திடீர் அறிவிப்பால், மாணவர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாமல் பள்ளி ஆசிரியர்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இன்னும் பொது தேர்வுகளுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பு கல்வியாளர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

மகாராஷ்டிர அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், இன்று காலையில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வரும் ஜனவரி 26ம் தேதியில் இருந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், காலை நேரங்களில், முதல் வேலையாக மாணவர்கள் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசிக்க வேண்டும் என்றும், இது ஜனவரி 26 முதல் கட்டாயமாக்கப்படுகிறது’ என்றும் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like