பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. விடிய விடிய தெளிய வைத்த போலீஸ்..

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. விடிய விடிய தெளிய வைத்த போலீஸ்..
 | 

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. விடிய விடிய தெளிய வைத்த போலீஸ்..

திருவள்ளூர் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது  அரிவாளால் கேக் வெட்டிய இளைஞர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழகத்தில் ரவுடி பினு தனது பிறந்தநாளை அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினார். அதன்பின்னர்  இப்போதெல்லாம் பிறந்தநாள், திருமணம் நாள் உள்ளிட்டவற்றை கொண்டாட, பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவதுதான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. விடிய விடிய தெளிய வைத்த போலீஸ்..

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்தாலும், ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்டவற்றில் பதிவிடுவதற்காகவே பலர் இதுபோன்ற அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு கைதான சம்பவங்களும் அரங்கேறின. இந்நிலையில், திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. விடிய விடிய தெளிய வைத்த போலீஸ்..

அஜித்குமார் என்ற இளைஞரின் பிறந்தநாளை கொண்டாட, கிராம சாலையின் நடுவே பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்நிலையில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக பிறந்தநாள் கொண்டாடிய அஜித்குமார், கலைவாணன், விஜய், உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித்குமார் மற்றும் கலைவாணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP