பெரிய கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்!!

பெரிய கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. அச்சமடைந்த மக்கள் செய்த காரியம்..
 | 

பெரிய கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்!!

பொது இடத்தில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கணபதி காலனியில் ஆகாஷ் என்பவர் தனது 20ஆவது பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் கேக்கை அவர் பெரிய கத்தியை கொண்டு வெட்ட சுற்றியிருந்த அவரது நண்பர்கள் உற்சாகப்படுத்தினர். இது குறித்து கிண்டி காவல் ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஆகாஷை பிடித்து அவரது செல்போன் வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ ஒன்றை கைப்பற்றினர். அதில் பெரிய கத்தியோடு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேக் வெட்டுவது பதிவாகியிருந்தது.

பெரிய கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்!!அதனடிப்படையில் 20 க்கும் மேற்பட்டோரை கிண்டி போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டதில் பிறந்தநாள் என அழைத்ததால் வந்ததாகவும், கத்தியால் கேக் வெட்டப் போவது தெரியாது என கூறியதின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் கிண்டியை சேர்ந்த ஆகாஷ்(20), மதன்(எ) யாதவ்(21), சைதாப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன்(23), ஆலந்தூரை சேர்ந்த சதீஷ் ஆகிய நான்கு பேர் மீது 283, 294(b), 506(ii) மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செய்த போலீசார் அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP