தமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்!

அரசியல் பல திடுக்கிடும் திருப்பங்கள் சாட்சியாக போவது என்னவோ உறுதியாகிவிட்டது. அதற்கான விதை, மக்கள் நீதி மய்யம் கட்சியால் போடப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இந்த அரசியல் மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தோர்.
 | 

தமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்!

தமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்களுக்கு பொதுமக்கள் சாட்சியாக போவது என்னவோ உறுதியாகி விட்டது. அதற்கான விதையை சத்தமில்லாமல் போட்டு வருகிறது மக்கள் நீதி மய்யம் கட்சி. காங்கிரஸ் கட்சியும் இந்த அரசியல் மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தோர்.

                                                 தமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் களம் காணாமல் கமல்  மெளனமாக இருந்ததே காரணமாக தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். எம்.பி.தேர்தலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகும் தனியாக களம் கண்ட நீதி மய்யம், ஒரு இடமாவது வெல்வதற்கு வாய்ப்புகள் இருந்தும், உள்ளாட்சித் தேர்தலைத் தவிர்த்ததற்கு பின்புலத்தில், சட்டசபைத் தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருவதே காரணம் என்கிறார்கள்.

திருச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய கமல்ஹாசன், "திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை. இதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. 2021ல் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார். கமலின் இந்த வார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டதற்கு காரணம், அவரது பேட்டி வெளியாகி சில மணி நேரம் கழித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி திமுகவை எதிர்த்து வெளியிட்ட ஒரு காட்டமான அறிக்கை.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ்-திமுக ஆகிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், ஓரணியில் போட்டியிட்டன. இந்த நிலையில் தான், அழகிரி தனது அறிக்கையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், மறைமுக தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டில், கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது." என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் அழகிரி.

கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய ஒரு முக்கியமான கட்சி பற்றி இப்படி ஒரு பரபரப்பான அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக, தன்னிச்சையாக இந்த முடிவுக்கு வந்திருக்க முடியாது. கண்டிப்பாக, டெல்லி மேலிடத்திடம் கலந்து பேசி விட்டுத் தான் அறிக்கையை அனுப்பியிருப்பார். தவிர, மூப்பனாருக்குப் பிறகு தைரியமாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இதுவரையில் எந்த விவகாரத்திலும் பேசியதோ, செயல்பட்டதோ கிடையாது. தற்போதைய டெல்லி மேலிடம் என்பது, அந்த கட்சியின் தற்காலிக தலைவரான சோனியா காந்தி என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ் ஒருபக்கம் திராவிட கட்சிகள் அல்லாத கட்சிகளுடன், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கூட்டணி அமைக்கப்படும் என்கிறார் கமல்ஹாசன். அப்படியான கட்சி என்று பார்த்தால் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை தான் உள்ளன. இதில் பாஜகவுடன், ம.நீ.ம கூட்டணி அமைக்கப் போவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. ஏனெனில் கொள்கை அளவில் இரண்டு கட்சிகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அடிக்கடி கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. சுமார் இரண்டு வருடங்களாகவே கமலை கட்சிக்குள் இழுக்கும் முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன. டெல்லிக்கு கமல்ஹாசன் ஒருமுறை சென்றிந்த போது,  காங்கிரஸின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது இந்த யூகங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு இருந்தது. ஆனால் கமல் கட்சியை காட்டிக் காட்டியே திமுகவை, மிரட்டி லோக்சபா தேர்தலில் பத்து தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக் கொண்டது என்ற ஒரு விமர்சனமும் திமுக கீழ்மட்ட தலைவர்களிடம் இருக்கிறது.

திமுகவின் இளம் தலைவர்கள் காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியும் என்பதால் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தாராளமாக, சீட்டுகளை ஒதுக்கி விடாதீர்கள் என்று தலைமைக்கு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகளை, கமல்ஹாசன் பேட்டி.., அழகிரியின் அறிக்கை.. ஆகியவை, அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP