1. Home
  2. தமிழ்நாடு

உஷார்!! பேஸ்புக்கில் இளம்பெண்களின் புகைப்படங்கள்! பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்!

உஷார்!! பேஸ்புக்கில் இளம்பெண்களின் புகைப்படங்கள்! பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்!

சேலம் சிவணாபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, இணையதளம் மூலமாக பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கு வாட்ஸ்அப் மூலம் லட்சுமி மேட்ரிமோனி என்ற ஒரு திருமண வரன் பார்க்கும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது. உடனே அதை கிளிக் செய்து விவரங்களை பதிவு செய்த சில மணி நேரங்களில் அவர்களது வாட்ஸ்அப்க்கு சில இளம் பெண்களின் புகைப்படங்கள், பெயர் உள்ளிட்ட தகவல்களுடன் வந்துள்ளது. அதை பார்த்த ஜெய் சங்கரின் குடும்பத்தினருக்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்து விட்டதால் உடனே அந்த லட்சுமி மேட்ரிமோனிக்கு தொடர்பு கொண்டு அப்பெண்ணின் விவரங்களை சொல்ல சேகரித்தனர்.

இதற்கு அந்நிறுவனம் இரண்டு கட்டமாக ரூ.10,000 பணம் வசூலித்தது. பின்னர் அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறிவந்த நிலையில் அவர்களின் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் அவர்களை தொடர்பு கொள் முடியவில்லை. அப்போது தான், டுபாக்கூர் மேட்ரிமோனி மூலமாக தான் ஏமாற்றப்பட்டதை ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் உணர்ந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க ஜெய் சங்கரின் மகன் எதேர்சையாக பேஸ்புக்கில் லட்சுமி மேட்ரிமோனி நிறுவனம் அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை பார்த்துள்ளார். இதனையடுத்து ஜெய் சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பெண்கள் சேலையுடன் புகைப்படங்கள் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிடுவதை, அவர்களுக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாக எடுத்து திருமணத்திற்கு பெண் தேடும் குடும்பத்தினருக்கு அந்த நிறுவனம் அனுப்பி வந்தது தெரிய வந்தது. இப்படி பல இளம்பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து புகார் அடிப்படையில் லட்சுமி மேட்ரிமோனி நிறுவனம் குறித்தும், அதன் நிர்வாகத்தினர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like