1. Home
  2. தமிழ்நாடு

உஷார்!! பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் மக்கள்! போக்குவரத்து நெரிசலில் திணறும் சென்னை! எங்கு தெரியுமா?

உஷார்!! பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் மக்கள்! போக்குவரத்து நெரிசலில் திணறும் சென்னை! எங்கு தெரியுமா?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையில், பொதுமக்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்குக் கிளம்பிச் செல்வதால், சென்னையில் தாம்பரம், கிண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1 மணி நேரமாக இந்தப் பகுதிகளில் வாகனங்கள் எங்கும் நகர முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் பொங்கலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. நாளை போகி பண்டிகை துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பாக இந்த பொங்கலுக்காக கூடுதலாக 29,213 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், பிற நகரங்களிலிருந்தும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் பொங்கல் பண்டிகைக்காக தனியார் பேருந்துகள் நிறைய இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 4,950 அரசு சிறப்புப் பேருந்துகள் பல நகரங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்பட உள்ளன. அதேபோல் சென்னையில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் நீண்ட விடுமுறை அளித்துள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக பலர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். முக்கிய பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி கொடுத்துள்ளது. இதனால் தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, கோவை, மதுரை, குமரி என்று பல மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ஆகவே தற்போது சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி தொடங்கி பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் போரூர், வளசரவாக்கம், அய்யப்பன்தாங்கல், பூவிருந்தமல்லி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றே இரவு சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. தற்போது இந்த நெரிசல் இன்னும் அதிகமாகியுள்ளது. 6 மணிக்கு பிறகு அலுவலகம் முடிந்த பின் இன்னும் நெரிசல் அதிகரிக்கும். இதனால் வாகன ஓட்டிகள் பொதுவான பாதையை தவிர்த்து மாற்று பாதையை பயன்படுத்த அறிவுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்குச் செல்பவர்கள், தங்களது பேருந்தைப் பிடிக்கச் செல்லும் போது, முன்கூட்டியே திட்டமிட்டு உங்களது பயணத்தை மகிழ்வானதாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அவசர அவசரமாக பேருந்து நிலையத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ கிளம்பிச் சென்றால், வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ள நேரிடும்!

newstm.in

Trending News

Latest News

You May Like