உஷார்!! இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது!!

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று அவ்வப்போது வதந்திகள் பரவி வந்த நிலையில் ஏ.டி.எம் மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

உஷார்!! இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது!!

ஏடிஎம் மையங்களில் இம்மாதம்  முதல் தேதியில் இருந்து ரூ.2000 நோட்டுக்கள் வராது என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உஷார்!! இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது!!

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று அவ்வப்போது வதந்திகள் பரவி வந்த நிலையில் ஏ.டி.எம் மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,  2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்களில் செலுத்தவும் வேண்டாம் என்றும் வங்கி சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளில் நேரிடையாக பணம் செலுத்தும் போது 2,000 ரூபாய் நோட்டுகளை செலுத்த வேண்டாம் எனவும் இந்தியன் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உஷார்!! இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது!!

இந்தியன் வங்கியின் இந்த நடவடிக்கை 2,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவிப்பதற்கான முன்னோட்டமா என்ற கேள்வியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பின் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் இன்னும் சீராகவேயில்லை என்கிற கருத்து நிலவி வரும் நிலையில், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், இந்தியன் வங்கி அறிவிப்பு வெளியிட்டவாறே, இம்மாதம் 1ம் தேதியில் இருந்து வங்கி ஏடிஎம்.களில் ரூ.2000 நோட்டுக்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. வங்கி மிஷினிலும் ரூ.2000 நோட்டுக்களை செலுத்தும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP