இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் கட்!  அமித்ஷாவின் பகீர் முடிவு!

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் கட்! அமித்ஷாவின் பகீர் முடிவு!
 | 

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் கட்!  அமித்ஷாவின் பகீர் முடிவு!

இந்தியாவின் பொருளாதாரத்தின் அதள பாதாள சரிவுக்கு மக்கள் தொகை தான் காரணம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது ஆளும் பாஜக அரசு. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜக அரசு, அவர்களது ஒவ்வொரு திட்டங்களையும் அதிரடியாக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள். இந்நிலையில், நாட்டின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அந்த குடும்பத்தினருக்கு அனைத்து அரசு சலுகைகளையும் ரத்து செய்யும் வகையில் அடுத்த மசோதாவை நிறைவேற்றும் முடிவில் அமித்ஷா உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் கட்!  அமித்ஷாவின் பகீர் முடிவு!

ஒரே நாடு, ஒரே கார்டு என்கிற டிஜிட்டல் இந்தியாவின் திட்டப்படி, தற்போது நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்ட் டேக், பணமில்லா பரிவர்த்தனை, ஜிஎஸ்டி என்று அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி வருகிறது  மத்திய அரசு. இந்நிலையில், பெரும் அச்சுறுத்தலாகி வரும் இந்திய மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்கள் தற்போது பெற்று வரும் சலுகைகள், ரேஷன், எரிவாயு மானியங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளையும் நிறுத்தி விடும் முடிவில் புதிதாக சட்டத்தை வகுக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP