ஏ.ஆர்.ரகுமானுக்கு சேவை வரி விதித்து அனுப்பிய நோட்டீசுக்கு தடை

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு, சேவை வரி விதித்து அனுப்பிய நோட்டீசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 | 

ஏ.ஆர்.ரகுமானுக்கு சேவை வரி விதித்து அனுப்பிய நோட்டீசுக்கு தடை

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு, சேவை வரி விதித்து அனுப்பிய நோட்டீசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நிதிமன்றத்தில்  ஏ.ஆர்.ரகுமான் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், ஒரு பாடலுக்கு அமைக்கப்படும் இசைக்கு பதிப்புரிமை சட்டப்படி, இசையமைப்பாளர் உரிமையாளர் ஆகிறார்.இதனால், தனது உரிமையை படத்தயாரிப்பாளருக்கு மாற்றித் தர இசையமைப்பாளருக்கு முழு உரிமை உள்ளது. எனவே, பதிப்புரிமையை மாற்றி தருவதற்கு சேவை வரி விதிக்க முடியாது.

                                                      ஏ.ஆர்.ரகுமானுக்கு சேவை வரி விதித்து அனுப்பிய நோட்டீசுக்கு தடை

ஆனால், சேவை வரி செலுத்த வேண்டும் என சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும் என்றம் மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்தும்,

வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP