தண்ணீர் பஞ்சத்தால் 10,000 வாயில்லா பிராணிகளை கொல்லத் துடிக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீயால் மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நெருப்பை அணைக்கத் தேவைப்படும் நீர் பற்றாக்குறையாகிக் கொண்டிருப்பதாகவும் அதற்குக் காரணம் இந்த ஒட்டகங்கள்தான் என்றும் கூறி வேட்டைக்காரர்களை வைத்து 10,000 ஒட்டகங்களைச் சுட்டுக் கொல்லப்போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
 | 

தண்ணீர் பஞ்சத்தால் 10,000 வாயில்லா பிராணிகளை கொல்லத் துடிக்கும் ஆஸ்திரேலியா!

தண்ணீர் பிரச்சனையை ஏதோ இந்திய மக்கள் மட்டுமே சந்தித்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது ஆஸ்திரேலிய மக்கள் மிக கொடூரமான முறையில் தண்ணீர் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். 

தண்ணீர் பஞ்சத்தால் 10,000 வாயில்லா பிராணிகளை கொல்லத் துடிக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீயால் மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது 
நெருப்பை அணைக்க ஆஸ்திரேலியாவின் தீயணைப்புப்படை மொத்தமும் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இன்னமும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளன. இதுவரை 50 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன என்பது நம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.

தண்ணீர் பஞ்சத்தால் 10,000 வாயில்லா பிராணிகளை கொல்லத் துடிக்கும் ஆஸ்திரேலியா!

 உலக அளவில் தெற்கு ஆஸ்திரேலியாவில் கிட்டதட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான ஒட்டகங்கள் வாழ்ந்து வருவதாக  கூறப்படுகிறது.  இந்நிலையில், நெருப்பை அணைக்கத் தேவைப்படும் நீர் பற்றாக்குறையாகிக் கொண்டிருப்பதாகவும் அதற்குக் காரணம் இந்த ஒட்டகங்கள் தான் என்றும் கூறி வேட்டைக்காரர்களை வைத்து 10,000 ஒட்டகங்களைச் சுட்டுக் கொல்லப் போவதாக அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP