காதலுக்கு உதவிய தங்கை.. காதலி நலம்.. தங்கை கர்ப்பம்.. அண்ணனின் ஒருவருட கொடூரச் செயல்

காதலுக்கு உதவிய தங்கை.. காதலி நலம்.. தங்கை கர்ப்பம்.. அண்ணனின் ஒருவருட கொடூரச் செயல்
 | 

காதலுக்கு உதவிய தங்கை.. காதலி நலம்.. தங்கை கர்ப்பம்.. அண்ணனின் ஒருவருட கொடூரச் செயல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (26). கூலி தொழிலாளியான இவர், அதேப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகளான தங்கை 16 வயது சிறுமியை தூதுவாக பயன்படுத்தி வந்துள்ளனர். சந்திரசேகரன் தனது காதலியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேச தனது பெரியப்பா வீடான பிரியா வீட்டை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்காக பெரியப்பா வீட்டிற்கு செல்லும்போது தனது சகோதரி மீதும் ஒரு கண் வைத்துள்ளார்.

காதலுக்கு உதவிய தங்கை.. காதலி நலம்.. தங்கை கர்ப்பம்.. அண்ணனின் ஒருவருட கொடூரச் செயல்ஒரு நாள் தனது காதலியை பெரியப்பா வீட்டில் சந்தித்து அவரை அனுப்பிவிட்டு தனது சகோதரியான பெரியப்பாவின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு  கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்து போயினர்.

காதலுக்கு உதவிய தங்கை.. காதலி நலம்.. தங்கை கர்ப்பம்.. அண்ணனின் ஒருவருட கொடூரச் செயல்

சிறுமியிடம் பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த ஓராண்டாக சந்திரசேகரன், தங்கை என்றும் பார்க்காமல் மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. தனது காதலியை பார்க்க வீட்டிற்கு வரும்போதெல்லாம் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வார் என கூறியதோடு ஓராண்டாக இந்த கொடூரம் நிகழ்ந்து வந்ததாக சிறுமி கூறினார். 

காதலுக்கு உதவிய தங்கை.. காதலி நலம்.. தங்கை கர்ப்பம்.. அண்ணனின் ஒருவருட கொடூரச் செயல்

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP