1. Home
  2. தமிழ்நாடு

எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க? இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!!

எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க? இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!!

பொதுவாக இன்றைய நாளில் வங்கிகளில் நமக்கு சாதமாக மிக பயனுள்ளதாக இருக்கும் விஷயங்களில் ஒன்று தான் டிஜிட்டல் சேவைகள். எனினும் டிஜிட்டல் சேவைகள் தான் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு உதவும்,


அதே சமயம், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி அறியவும் இது உதவும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை ஏனெனில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி நடந்திருப்பதை சரியான நேரத்தில் நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கும் வாய்ப்பில்லை. எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள ஏடிஎம் திருத்தங்களில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் என்பது வரவேற்கதக்க விஷயம் தான் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஆரம்பத்தில், செல்போன் கொண்டு செல்லாவிட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்தே நீங்கள் பணத்தை எடுக்க முடியாது என்று வாடிக்கையாளர்கள் முணுமுணுத்தாலும், பர்ஸைத் தொலைப்பவர்கள், நிச்சயம் அவர்களது செல்போனைப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆக, திருட நினைத்தாலும், எவராலும் 10,000க்கு மேல் வங்கி ஏடிஎம் களில் பணம் எடுக்க முடியாது. இதன் மூலமாக நீங்கள் உங்கள் கார்ட்டை ப்ளாக் செய்வதற்கான அவகாசம் கிடைக்கிறது என்கிறார்கள். அதே போல், மொபைல் எண்ணை மறக்காமல் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்து விடுங்கள். வேறு ஏதாவது காரணத்தினால் உங்களது பழைய நம்பரை மாற்ற நேரிட்டால் வங்கிக்கு அதை உடனே அதை தெரியப்படுத்தவும். மொபைல் எண் மட்டும் அல்ல, மெயில் ஐடியும் அப்படித்தான். ஏனெனில் உங்களது மெயில் ஐடியை வைத்தும் மோசடி செய்ய முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.


இது குறித்து எஸ்பிஐ வங்கி, அதன் ட்விட்டர் பக்கத்தில் உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை மாற்றியுள்ளீர்களா? ஆம் எனில் அதை வங்கிகளில் உடனே புதுப்பியுங்கள், ஏனெனில் எந்தவொரு எங்களது முக்கியமான தகவலையும் இழக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. வங்கி கணக்கில் எப்படி மாற்றுவது? எஸ்பிஐ வங்கி இணைய சேவையை லாகின் செய்து, அங்கு உங்களது மை அக்கவுன்ட்ஸ் & புரஃபைல் ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் புரஃபைல் லிங்கை க்ளிக் செய்து உங்களது தனிப்பட்ட விவரம் மற்றும் மொபைல் எண்ணை பகுதிக்கு க்ளிக் செய்து செல்லவும். இங்கு திருத்து ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.

newstm.in

Trending News

Latest News

You May Like