உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு? ரஜினி மக்கள் மன்றம் அதிரடி முடிவு! 

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது - ரஜினி மக்கள் மன்றம் அதிரடி
 | 

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு?  ரஜினி மக்கள் மன்றம் அதிரடி முடிவு! 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தில் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுதாகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP