பள்ளி மாணவிகளை கையை பிடித்து இழுத்து அராஜகம்.. வடமாநில இளைஞருக்கு வலைவீச்சு..

Sexual harassment for students
 | 

பள்ளி மாணவிகளை கையை பிடித்து இழுத்து அராஜகம்.. வடமாநில இளைஞருக்கு வலைவீச்சு..

செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவிகளை வடமாநில இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை அறிந்து அங்கு கிராம மக்கள் திரண்டதால் பதற்றம் நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணியில் ஒடிசா, பீஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 220 பணியாளர்கள் இங்கேயே தங்கி செய்துவருகிறார்கள். அந்த கட்டிடத்தை கடந்துதான் பெருந்தண்டலம் கிராமத்திற்கு மக்கள் செல்ல வேண்டும். இந்நிலையில், நேற்று இரவு இரண்டு பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அங்கு கட்டிடப்பணியில் வேலை செய்யும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராம்சர்மா மாணவிகள் கையை பிடித்து இழுத்திருக்கிறார்.

பள்ளி மாணவிகளை கையை பிடித்து இழுத்து அராஜகம்.. வடமாநில இளைஞருக்கு வலைவீச்சு..

மேலும் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அடுத்தபடியாக தனியாக வந்த மற்றொரு மாணவியை ராம் சர்மா கையை பிடித்து இழுத்து அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்றுள்ளார். எனினும் அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அப்பகுதி இளைஞர்கள் புதருக்குள் ஒருவர் ஓடுவதை கண்டு விரட்டும் போது ராம் சர்மா தப்பித்து ஓடிவிட்டார். பள்ளி மாணவிகளை கையை பிடித்து இழுத்து அராஜகம்.. வடமாநில இளைஞருக்கு வலைவீச்சு..இச்சம்பவம் குறித்து தகவலறிந்து ஊர்மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கட்டிடப்பணி நடைபெற்ற இடத்தில் நுழைந்து முற்றுகையிட்டனர். அதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் தப்பியோடிய ராம் சர்மாவின் நண்பர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP