அண்ணே... டயர் தனியா ஓடுது! பீதியில் உறைந்த பயணிகள்!! கரகாட்டக்காரனை மிஞ்சிய தனியார் சொகுசு பேருந்து!

கரகாட்டக்காரன் சினிமாவில் காரின் டயர் கழன்று ஓடும் காமெடி காட்சி பிரபலம்,அதே போல் தனியார் சொகுசு பேருந்து முன்பக்க டயர் ஒன்று தனியாக கழன்று ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.பேருந்தை ஓட்டுனர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சுமார் 20 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் உயிர் தப்பினர்
 | 

அண்ணே... டயர் தனியா ஓடுது! பீதியில் உறைந்த பயணிகள்!! தனியார் பேருந்துகளின் அராஜகம்!!

தமிழகத்தில் சாதாரண நாட்களிலேயே தனியார் பேருந்து ஓட்டுனர்கள் செய்யும் அட்ராசிட்டிகளை தாங்க முடியாது. பண்டிகை நாட்களில் தொலைதூர பயணங்களை பேருந்துகளில் மேற்கொள்ளும் பயணிகள், இரவு தூக்கத்தை தியாகம் செய்தெல்லாம் பீதியுடனே பேருந்து ஓட்டுனரைக் கண்காணித்துக் கொண்டிருந்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கின்றன. பயணிகளிடம் சொகுசுப் பேருந்து என்கிற பெயரில் அடாவடியாக  கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் அந்த பணத்தில் 5 சதவிகிதத்தையாவது பேருந்து பராமரிப்பதில் செலவழிக்கலாம்.

அண்ணே... டயர் தனியா ஓடுது! பீதியில் உறைந்த பயணிகள்!! தனியார் பேருந்துகளின் அராஜகம்!!

தனியார் பேருந்து நிறுவனங்களில் ஒன்றான பிரபல கே.பி.என். டிராவல்ஸ் பேருந்துகளும், ஓட்டுனர்களும் பலமுறை இப்படி சேவை குறைப்பாடு காரணங்களினால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள். பேருந்து ஓட்டுனர் குடி போதையில் தள்ளாடிக்கொண்டே பேருந்தை மேற்கொண்டு இயக்க முடியாமல் பயணிகள் மத்தியிலேயே பேருந்தின் மீது சாய்ந்து, சரிந்து தள்ளாடிய சம்பவங்கள் எல்லாம்  இதற்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. இந்நிலையில், கரகாட்டக்காரன் சினிமாவில் காரின் டயர் கழன்று ஓடும் காமெடி காட்சியைப் போல கே.பி.என். டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்தின் முன்பக்க டயர் ஒன்று, பேருந்து ஓடிக் கொண்டிருந்த போதே தனியாக கழன்று ஓடிய சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை மதியம் கரூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டுச் சென்று கொண்டிருந்தது. மண்மங்கலம் பகுதியில் பேருந்து முழுவதும் பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் முன் பக்க இடது டயர் மட்டும் பேருந்தில் இருந்து தனியாக கழன்று ரோட்டில் அப்படியே ஓடித் துவங்கியது.

அண்ணே... டயர் தனியா ஓடுது! பீதியில் உறைந்த பயணிகள்!! தனியார் பேருந்துகளின் அராஜகம்!!

பேருந்துக்கு முன்னால், பேருந்தின் டயர் தனியே ஓடுவதைப் பார்த்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். பேருந்தில் இருந்த சிலர், ஓட்டுநரிடம், அண்ணே... பஸ்ஸோட டயர் தனியா ஓடுது’ என்று ஓட்டுனரிடம் இது குறித்து கூறினார்கள்.

தனியே கழன்று ஓடிய டயர், பாய்ந்து ஓடிய வேகத்தில் சாலையோரம் இருந்த கூட்டுறவு நியாயவிலை கடையின் சுற்று சுவரை உடைத்துக் கொண்டு வளாகத்திற்குள் புகுந்தது. அந்த சமயத்தில் பயணிகளின் கூக்குரல் கேட்டு, சாமர்த்தியமாக பேருந்தை ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

பஸ் முதலாளிங்களா... உங்க பர்ஸை நிரப்புறதுலேயே குறியா இருக்காம.. அப்பப்போ கொஞ்சம் பஸ்ஸையும் பார்த்துக்கங்க... உங்களை நம்பி வர்ற பயணிகளோட உசுரு உங்க கையில தான் இருக்கு!

                 அண்ணே... டயர் தனியா ஓடுது! பீதியில் உறைந்த பயணிகள்!! தனியார் பேருந்துகளின் அராஜகம்!!      அண்ணே... டயர் தனியா ஓடுது! பீதியில் உறைந்த பயணிகள்!! தனியார் பேருந்துகளின் அராஜகம்!!

                                                                     அண்ணே... டயர் தனியா ஓடுது! பீதியில் உறைந்த பயணிகள்!! தனியார் பேருந்துகளின் அராஜகம்!!

சுமார் 20 க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP