1. Home
  2. தமிழ்நாடு

குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்தார் அமித்ஷா!

குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்தார் அமித்ஷா!

 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்கப்பட வில்லை .இதை எதிர்த்து காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டன. வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கலவரங்களும்,பெரும் போராட்டங்களும் நடந்தது குறிபிடத்தக்கது.

இத்தனை எதிர்ப்புகளுக்கிடையில் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கட்கிழமை முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. 311 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 80 உறுப்பினர்கள் எதிராகவும் மசோதாவிற்கு வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

இம்மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சட்டமாக்கப்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like