ஏர் இந்தியா விற்பனை! மத்திய அரசின் அதிரடி முடிவு!

50,000 கோடி இழப்பு! ஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனைக்கு! மத்திய அரசின் அதிரடி முடிவு!
 | 

ஏர் இந்தியா விற்பனை! மத்திய அரசின் அதிரடி முடிவு!

ஏர் இந்தியாவின் நூறு சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, `ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான குழு, ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் விற்பதற்கு முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஏர் இந்தியா விற்பனை! மத்திய அரசின் அதிரடி முடிவு!

தொடர்ந்து பல ஆண்டுகளாக  இழப்பை சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 8,556 கோடி ரூபாய் இழப்பை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP