ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பின்பு இருக்கு! சிம்புவின் அதிரடி திட்டம்

ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பின்பு இருக்கு! சிம்புவின் அதிரடி திட்டம்
 | 

ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பின்பு இருக்கு! சிம்புவின் அதிரடி திட்டம்

தாய்லாந்து சென்று திரும்பிய நடிகர் சிம்பு, கடந்த 6ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்தார். நாற்பது நாற்களாக விரதம் இருந்து வந்த சிம்பு, இன்று(டிச.9) மாலை தனது சபரிமலை செல்லும் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். ஜயப்பன் கோவிலில் தரிசனம் முடித்து திரும்புவதற்கு பத்து நாட்களாகும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு தலையில் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டு செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பின்பு இருக்கு! சிம்புவின் அதிரடி திட்டம்சிம்புவின் சபரிமலை ஆன்மீகப் பயணம் முடிந்தவுடன், மீண்டும் அவர் திரைத்துறையில் தனது கவனத்தை செலுத்த உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கடைசியாக "வந்தா ராஜாவா தான் வருவான்" படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது பல பிரச்னைகள் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் "மாநாடு" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடுத்தாண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஹன்சிகா மோத்வானி உடன் நடித்துள்ள "மகா" படத்தின் மீதமுள்ள காட்சிகளும் இந்த மாதத்தின் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்திற்குள் முழுமையாக எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தொட்டி ஜெயா பட இயக்குநர் துரை உடன் கூட்டணி அமைத்து நடிகர் சிம்பு நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP