நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்!

நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்!
 | 

நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்!

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, சில நாட்களுக்கு  முன்னர், அவரது கணவர் ஈஸ்வர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தது நினைவிருக்கலாம். அந்த புகார் மனுவில், தனது கணவர் ஈஸ்வர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை கொடுமை படுத்துகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.  நடிகை ஜெயஸ்ரீ அளித்திருந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட போலீசார், ஈஸ்வரை வரதட்சணை வழக்கின் கீழ் விசாரித்து வந்தனர். 

நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்!

இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ  கணவர், மாமியார் செய்து வந்த கொடுமைகளினால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி, தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயஸ்ரீ,  தற்கொலைக்கு முயல்வதற்கு முன்னர், தனது தோழி ரேஷ்மாவிற்கு அனுப்பிய வாட்ஸ் அப் ஆடியோ நோட் ஒன்று வெளியாகி சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்!

அந்த ஆடியோவில், " ஹாய் ரேஷ்... நான் இப்போது ரொம்ப மனஅழுத்ததில் இருக்கிறேன். எனக்கு வாழ தகுதியில்ல.. இத்தனை நாட்களாக ஒரு அக்காவைப் போல என்னை நீ பார்த்துக் கொண்டதற்கு உனக்கு நன்றி சொல்வதற்காக தான் இந்த வாய்ஸ் மெசேஜ். எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னோட வந்து, என் வீட்டிலேயே தங்கிக் கொள் என்று நீ சொல்லியிருந்தாய். அதற்கு நன்றி. இது என்னுடைய கடைசி செய்தியாக இருக்கும். முடிஞ்சா அப்பப்போ என் நன்னுவ பாத்துக்கோ. குட் பை ரேஷ் " என்று கண்ணீருடன் பேசி பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP