ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது - தர்பார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

"ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது" - தர்பார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
 | 

ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது - தர்பார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ளது 'தர்பார்'. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், யோகி பாபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சங்கர், இசையமைப்பாளர் அனிருத், லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 'தர்பார்' ஸ்டைலாகவும், த்ரில்லாகவும் இருக்கும் என்றார். ரமணா படத்தை பார்த்தபோதே எனக்கு முருகதாஸை பிடித்துவிட்டது. கஜினி திரைப்படத்திற்கு பிறகு, முருகதாசுடன் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் சில காரணங்களால் அது தள்ளிப்போய்விட்டது. தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், டிசம்பர் 12- ஆம் தேதி எனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்தார். மேலும் ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது. தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி என பேசினார். இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான ஞானம் படைத்தவர்கள் எவரும் இல்லை. அந்த திறமை அனிருத்துக்கு இப்போதே இருக்கிறது என ரஜினிகாந்த் தர்பார் திரைப்பட பாடல் வெளியிட்டு விழாவில் பேசினார். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP