சென்னையில் பரபரப்பு.....மாணவியை நடுரோட்டில் வெட்டிய இளைஞர்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சென்னையில் பரபரப்பு.....மாணவியை நடுரோட்டில் வெட்டிய இளைஞர்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்போட்டையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வந்த கல்லூரி மாணவியை  நேற்று காலை இளைஞர்  ஒருவர் பின் தொடர்ந்து வந்து, தன் கையால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அம்மாணவியின் இரண்டு கைககளில் சராமரியாக வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அம்மாணவியை பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அம்மாணவி ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, குரோம்பேட்டை நெமிலிச்சேரியை சேர்ந்த பொன் பாக்கியராஜை (19) கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவரும், அம்மாணவியும் 4 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தன்னுடன் பேசாமல் இருந்த காரணத்தால் வெட்டியதாகவும் தெரிவித்தார்.

அம்மாணவி, அவர் தன்னை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், ஆனால், தான் அவரை காதலிக்கவில்லை.  நட்பாக மட்டுமே பழகி வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP