கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மகனை கழுத்தை நெறித்து கொன்ற கொடூர தாய்.!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மகனை கழுத்தை நெறித்து கொன்ற கொடூர தாய்.!
 | 

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மகனை கழுத்தை நெறித்து கொன்ற கொடூர தாய்.!

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த  ராம்குமார்(28) -  ஆனந்த ஜோதிக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜீவா(5), லாவண்யா(3) என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் சிறுவன் ஜீவா வீட்டில் மயக்கமடைந்த நிலையில் விழுந்து கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மகனை கழுத்தை நெறித்து கொன்ற கொடூர தாய்.!

சிறுவனின் தாயார் ஆனந்த ஜோதியிடம் கேட்டபோது, ஜீவாவை மதியம் தூங்க வைத்து விட்டு வெளியில் சென்றதாகவும் எப்படி உயிரிழந்தான் என தெரியாது எனவும் கூறினார். இந்நிலையில் மகன் உயிரிழப்பில் மனைவி ஆனந்த ஜோதி மீது சந்தேகம் அடைந்த ராம்குமார் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனந்த ஜோதியிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அவரது ஆனந்த லீலைகள் வெளியே தெரியவந்தன. ஆனந்த ஜோதிக்கும் அவரது கணவரின் உறவினர் மருதுபாண்டி என்கிற நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மகனை கழுத்தை நெறித்து கொன்ற கொடூர தாய்.!

சம்பவத்தன்று இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ஜீவா பார்த்துள்ளான். கணவரிடம் இந்த விஷயத்தை ஜீவா கூறிவிடுவான் என பயந்த ஆனந்த ஜோதி, பெற்ற மகனை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். கள்ளகாதலனுடன் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவின் வாயை பொத்தி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்பின் எதுவும் தெரியாதது போல கணவரிடம் உறவினர்களிடமும் நாடகமாடியுள்ளார். இதையடுத்து கொலை வழக்கு பதியப்பட்டு இருவரும் கைதாகி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP