முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை!

குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பான புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பான புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 

                                                              முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகள் கடந்த  நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். இதையடுத்து தேர்வாணையம் நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP