சீனாவில் இருந்து வந்த 8 பேருக்கு பொது இடங்களுக்கு செல்ல தடை! சுகாதாரத்துறை அதிரடி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 29,700 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
 | 

தமிழகத்தில் கொரோனா அறிகுறி! வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழகத்திற்குள்ளும் நுழைந்திருப்பது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்னர் வந்த தகவலின் படி, மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் ஒருவருக்கும், கடலூர், நெய்வேலியைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸினால் தாக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில்  சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 29,700 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா அறிகுறி! வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.  இந்நிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று  சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்த பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தமிழகத்தில் கொரோனா அறிகுறி! வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு!!

இருப்பினும் சுகாதாரதுறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள கூடாது என்றும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP