திருவானைக் கோயிலில் 505 தங்கக்காசுகள் கண்டெடுப்பு!! நந்தவனம் அமைக்க தோண்டியப்போது பொக்கிஷம்!!

திருவானைக் கோயிலில் 505 தங்கக்காசுகள் கண்டெடுப்பு!! நந்தவனம் அமைக்க தோண்டியப்போது பொக்கிஷம்!!
 | 

திருவானைக் கோயிலில் 505 தங்கக்காசுகள் கண்டெடுப்பு!! நந்தவனம் அமைக்க தோண்டியப்போது பொக்கிஷம்!!

திருச்சி திருவானைக் அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைப்பதற்காக புதன்கிழமை பள்ளம் தோண்டப்பட்ட போது 505 தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டன. பஞ்சப்பூதத் தலங்களில் நீா்த் தலமாக விளங்கி வருகிறது அகிலாண்டேசுவரி அம்மன் கோயில். இக்கோயிலில், பிரசன்ன விநாயகா் சன்னதி பின்புறத்தில் வாழைத் தோட்டம் உள்ளது. அந்த இடத்தை சுத்தம் செய்து, நந்தவனமாக்கி பூச்செடிகள் வைப்பதற்காக திருக்கோயில் பணியாளா்கள் மூலம் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

திருவானைக் கோயிலில் 505 தங்கக்காசுகள் கண்டெடுப்பு!! நந்தவனம் அமைக்க தோண்டியப்போது பொக்கிஷம்!!

அப்போது இப்பகுதியிலிருந்த உதியம் மரத்தின் கீழ்புறத்திலுள்ள மணல் பகுதியில் சிறிய செம்பால் ஆன உண்டியல் இருந்தது. இதுகுறித்து அலுவலா்களுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் அப்பகுதிக்குச் சென்று உண்டியலை மீட்டு, அதை உடைத்து பார்த்தனர். அதில் சிறிய அளவிலான உருவம் பொறித்த 504 தங்கக் காசுகளும், பெரிய அளவிலான ஒரு காசும் என மொத்தம் 505 தங்கக்காசுகள் இருந்தது தெரிய வந்தது.

திருவானைக் கோயிலில் 505 தங்கக்காசுகள் கண்டெடுப்பு!! நந்தவனம் அமைக்க தோண்டியப்போது பொக்கிஷம்!!

இந்து சமய அறநிலையத் துறை நகை சரிபார்க்கும் அலுவலா்கள், வைர நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியாளா் திருவானைக்கா கோயில் வந்து, காசுகளை சோதனை செய்ததில் அவை தங்கக்காசுகள் என்பதை உறுதிப்படுத்தினா். அவற்றின் மொத்த மதிப்பு 1,716 கிராம் என்று மதிப்பிடப்பட்டது. இதைத் தொடா்ந்து தங்கக்காசுகளை வட்டாட்சியா், மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தால். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP