5 பெண்களை ஏமாற்றினார்! என்னையும் எனது மகளையும் கொடுமை படுத்துகிறார்.. எஸ்.ஐ மீது மனைவி பகீர் புகார்..

5 பெண்களை ஏமாற்றியுள்ளார்.. என்னையும் எனது மகளையும் கொடுமை படுத்துகிறார்.. சிறப்பு எஸ்.ஐ மீது மனைவி பகீர் புகார்..
 | 

5 பெண்களை ஏமாற்றினார்! என்னையும் எனது மகளையும் கொடுமை படுத்துகிறார்.. எஸ்.ஐ மீது மனைவி பகீர் புகார்..

அவருக்கு 5 பெண்களுடன் தொடர்பு உள்ளது.. வசதியான பெண்களை வலையில் வீழ்த்தி ஏமாற்றுகிறார்.. என தனது கணவரான காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் பானுரேகா என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரும், சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் பிரபாகரனும் இளம் வயதில் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். பின்னர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமையினால் ஒரு ஆண்டுகள் மட்டுமே இவர்களது இல்லறவாழ்க்கை நீடித்தது.

5 பெண்களை ஏமாற்றினார்! என்னையும் எனது மகளையும் கொடுமை படுத்துகிறார்.. எஸ்.ஐ மீது மனைவி பகீர் புகார்..

இந்நிலையில் 1995ஆம் ஆண்டு பானுரேகாவின் பெற்றோர் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு பானுரேகாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்ததும் ஸ்ரீவாசனை தொடர்பு கொண்ட பிரபாகரன் சட்டப்படி தனக்கும் பானரேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது என்று தெரிவிக்க , ஸ்ரீனிவாசன் பானுரேகாவை பிரிந்து சென்று விடுகிறார். இதேபோல் 2000ஆம் ஆண்டு அனைத்து விவரத்தையும் கூறி விருதுநகரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை திருமணம் செய்தனர். அவருக்கும் பானுரேகாவிற்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் பிரபாகரன் முருகானந்தத்தை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்க அவரும் பிரிந்து சென்றுவிட்டார்.

5 பெண்களை ஏமாற்றினார்! என்னையும் எனது மகளையும் கொடுமை படுத்துகிறார்.. எஸ்.ஐ மீது மனைவி பகீர் புகார்..

இதனையடுத்து தனது 2 பிள்ளைகளுடன் பானுரேகா பெங்களூருவில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு உறவினர் திருமணத்துக்காக சென்னைக்கு வந்தபோது முதல் கணவரான பிரபாகரனை சந்திக்க நேரிட்டது. அப்போது, தான் திருந்திவிட்டதாகவும், ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறியதால் அதனை நம்பி மனமிறங்கினேன். இதனால் பெங்களூரிலிருந்து சென்னை வந்து அவருடன் குடும்பம் நடத்தினேன். ஆனால் அவர் திருந்தவே இல்லை.

5 பெண்களை ஏமாற்றினார்! என்னையும் எனது மகளையும் கொடுமை படுத்துகிறார்.. எஸ்.ஐ மீது மனைவி பகீர் புகார்..

வீட்டுக்கு மதுபோதையில்தான் வருவார். நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்வார். அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் பானுரேகா புகார் அளித்தார். அப்போது பிரபாகரன் மீது ஏற்கனவே 5 பெண்கள் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானுரேகா, பணத்தை குறிக்கோளாக கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் கைவிடப்பட்ட, வசதியான பெண்களை வலையில் விழாவைப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் குற்றம் சாட்டினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP