லாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. மருத்துவனையில் உயிருக்கு போராடும் 30 பேர்..

விபத்தில் சிக்கிய லாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. 30 பேர் மருத்துவனையில் போராட்டம்..
 | 

லாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. மருத்துவனையில் உயிருக்கு போராடும் 30 பேர்..

விழுப்புரத்தில் சென்னை – திருச்சி புறவழி சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 30 பேர் காயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அருகே சென்னை – திருச்சி புறவழிச்சாலையில் இன்று(பிப்.14) அதிகாலை 3 மணி அளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று சாலையில் தடுப்பு கட்டையில் மீது மோதியது. இதனால் அந்த வாகனம் சாலையில் நின்றதால் பின் தொடர்ந்து வேகமாக சென்ற ஆம்னி பேருந்து, மினி லாரி மீது மோதியது. மேலும் மற்றொரு மினி லாரி, அரசு விரைவு பேருந்தும் விபத்தில் சிக்கி நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

லாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. மருத்துவனையில் உயிருக்கு போராடும் 30 பேர்..

இதனால் சென்னையில் இருந்து திருச்சி சென்ற 18 டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் விழுப்புரம் நகரத்திற்குச் சென்று மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின்னர் 4 ராட்ச கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

லாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. மருத்துவனையில் உயிருக்கு போராடும் 30 பேர்..

மேலும் தீயணைப்பு வீரர்கள் கேஸ் டேங்கர் லாரி மீது நுரையையும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணிக்கு பின்னர் டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 30 பேர் சிறு காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நேரத்தில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP