நிதி நிறுவன ஊழியரை கடத்தி சித்திரவதை.. நடிகர் கருணாஸ் கார் டிரைவர் உள்பட 4 பேருக்கு வலை..

பைனான்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்திரவதை.. நடிகர் கருணாஸ் கார் டிரைவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
 | 

நிதி நிறுவன ஊழியரை கடத்தி சித்திரவதை.. நடிகர் கருணாஸ் கார் டிரைவர் உள்பட 4 பேருக்கு வலை..

சென்னையில் ரூ.2.50 லட்சம் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை செய்ததாக நடிகர் கருணாஸ் கார் டிரைவர் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (24). இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் மல்டி லெவல் நிறுவனத்தில் செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வாரந்தோறும் பணம் கிடைக்கும்' என்று சரத்குமாரிடம் கூறியுள்ளார். இதை நம்பி, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சரத்குமார் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

நிதி நிறுவன ஊழியரை கடத்தி சித்திரவதை.. நடிகர் கருணாஸ் கார் டிரைவர் உள்பட 4 பேருக்கு வலை..

ஆனால், செல்வகுமார் சொன்னபடி அந்த நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை என்றதும் தனது பணத்தை சரத்குமார், திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராததால் சரத்குமார், கடந்த 19ஆம் தேதி இரவு நண்பர்கள் வசந்த், கார்த்திக் மற்றும் அஜித் ஆகியோருடன் சென்று வடபழனியில் இருந்து செல்வகுமாரை பைக்கில் தூக்கிச்சென்றனர். மேலும் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்து நிதி நிறுவனத்தில் கட்டிய ரூ.2.50 லட்சம் பணத்தை கேட்டு மிரட்டி சரமாரியாக அடித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வகுமாரை மீட்டனர்.

நிதி நிறுவன ஊழியரை கடத்தி சித்திரவதை.. நடிகர் கருணாஸ் கார் டிரைவர் உள்பட 4 பேருக்கு வலை..

சரத்குமார் உட்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து செல்வகுமார் கொடுத்த புகாரின்படி நடிகர் கருணாஸ் கார் டிரைவர் சரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் மற்றும் ஆபாசமாக பேசி தாக்கியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சரத்குமார் உட்பட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல், ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக செல்வகுமார், கனகேஸ்வரன் மற்றும் விஜய் ஈஸ்வரன் ஆகியோர் மீது கூட்டு மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP