4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..

4 முறை கருகளைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..
 | 

4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..

உடன் பணியாற்றிய பெண் காவலரை கர்ப்பமாக்கிவிட்டு, பள்ளியில் உடன் படித்த பெண்ணைத் திருமணம் செய்ததால் காவலர் ஒருவர் சிறை சென்றுள்ளார். 

விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி(26). இவர்  பள்ளியில் படிக்கும் போது கருங்காலிப்பட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை காதலித்து வந்தார். பள்ளி முடிந்தும் இருவரின் காதல் தொடர்ந்தது. இந்நிலையில், காவலர் பணிக்குச் சேர்ந்த சரத்குமார், தற்போது விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகும், ராஜலட்சுமி உடனான காதலை தொடர்ந்து வந்துள்ளார். உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசைவார்த்தை கூறி அவருடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.  

4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..

இந்த சூழலில் தன்னுடன் விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் பிரியங்கா(27) என்ற பெண்ணையும் சரத்குமார் காதலித்து வந்தார். இந்நிலையில் ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்ட பிரியங்கா, சரத்குமாரை திருமணம் செய்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். ராஜலட்சுமி, இது குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சரத்குமார், பிரியங்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், தனது முதல் காதலியான ராஜலட்சுமியை ஒரு கோயிலில் வைத்து சரத்குமார் திருமணம் செய்து கொண்டார்.

4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..

இதைக் கேள்விப்பட்டதும் பிரியங்கா அதிர்ச்சியடைந்தார். உடனே இது பற்றி அவர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், தான் கடந்த 2018ஆம் ஆண்டு ஆயுதப்படையில் பணியாற்றி வந்த சரத்குமார் உடன் காதல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், அப்போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சரத்குமார் பலமுறை தன்னோடு தனிமையில் இருந்ததாக கூறியுள்ளார். இதனால், தான் 4 முறை கர்ப்பமடைந்து, சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்புச் செய்ததாக பிரியங்கா கூறியுள்ளார்.

4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..

தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் சரத்குமார், தன்னை ஏமாற்றி விட்டு ராஜலட்சுமியை திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது தொடர்பாக சரத்குமாரிடம் கேட்டபோது, அவரும் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வரும் கீதா என்பவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் பிரியங்கா கூறியிருந்தார்.

4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..

பிரியங்கா புகாரின் பேரில் சரத்குமார், கீதா ஆகியோர் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியங்காவை கர்ப்பமாக்கி சரக்குமார் ஏமாற்றியதுடன் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து சரத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP