நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ரெடி... 

நித்யானந்தாவின் கைலாசாவுக்கு குடியேற 40 லட்சம் பேர் ரெடி...
 | 

நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ரெடி... 

கைலாசாவுக்கு குடியுரிமைக் கேட்டு சுமார் 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசா தனிநாடு அமைந்தே தீரும் எனவும் நித்யானந்தா உறுதியுடன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டும் விவகாரங்களில் ஒன்று நித்யானந்தா மீதான புகார்கள். குழந்தைக் கடத்தல், பாலியல் புகார் என நித்யானந்தா மீது பெண் சீடர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆண் சீடர்களுக்கும் நித்யானந்தா பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புதிய புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் சமூக வலைத்தளத்தில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, 2003ஆம் ஆண்டு தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை என குறிப்பிட்டார்.

நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ரெடி... 

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தான் நிரபராதி என நிரூபித்துள்ளதாக கூறிய அவர் ஆன்மீகத் துறையில் தான் என்றோ தலைவனாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் ஆவேசமாகப் கூறினார். 
வரும் 18ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூரு காவல்துறைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP